இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்டுள்ள கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னாள்
அமைச்சரான டேவிட் பிரோஸ்ட் நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கியவராக அமைச்சர் டேவிட் பிரோஸ்ட் உள்ளார். இந்நிலையில் இவர் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் கூறியதாவது, தான் பதவி விலகியதற்கு இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் காரணமல்ல என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அரசின் சில முடிவுகளை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லாததே தனது பதவி விலகலின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.