தமிழகத்தில் கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்க கூடிய வகையில் அரசு விருப்புரிபமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விருப்புரிமை கீழ், எந்த ஆவணங்களும் இல்லாமல் ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியிருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி சுயலாபம் அடைந்ததாகவும் அதற்கு உடனடியாக செயல்பட்டதாக கூறி அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி பர்வின், முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கம், அவரது மகன் துர்கா சங்கர் ஆகிய 7 பேருக்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை பதிவு செய்வதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறாதால் ஜாபர் சேட், வீட்டு வசதி வாரியத்தின் அப்போதே செயல் பொறியாளர் முருகையா மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு. இதனால் அமைச்சர் பெரியசாமி ஜாபர் செட்டின் மனைவி பர்வின் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக சென்னை எம்.பி., எம்.எல்.ஏக்.கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு குற்ற பிரிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியசாமி, பர்வின் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த னர். இந்த மனுக்களை நீதிபதி நிர்மல் குமார், வழக்கு புலன் விசாரணையில் திரப்பட்ட ஆவண ஆதாரங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து இவர்களுக்கு எதிராக வழக்கை தொடர போதுமான ஆதாரங்கள் உள்ளதாக என்று கூறி வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.