Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திசை திருப்ப பாக்குறாங்க…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீரென தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக கே.சி. வீரமணி இருந்துள்ளார். இவருக்கு சொந்தமான அலுவலகம், கல்லூரி, வீடு மற்றும் ஆதரவாளர்கள், உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த சோதனையானது ஒரே நாளில் 35 இடங்களில் நடைபெற்றுள்ளது. அதன்பின் வீரமணியின் உதவியாளராக இருந்த ஷாம் குமார் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையானது காலை 6 மணி முதல் இரவு ஏழு மணி வரை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சோதனை முடித்து விட்டு வெளியே வந்த ஷாம் குமார் கூறும் போது வீட்டின் ஒவ்வொரு அறையாக அவர்களுக்கு அழைத்துச்சென்று காட்டினேன். அதில் வீட்டிலிருந்த வங்கி பாஸ் புக், வீடு கட்டியதற்கான லோன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், இன்ஷூரன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என என்னிடம் இருந்தது குறித்து அவர்கள் கேட்டறிந்துள்ளனர்.

பிறகு வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் குறித்து கேட்ட போது அவற்றை வாங்கி ஏ.டி.எமில் இருந்து பெறப்பட்ட ரசீதை காட்டினேன் இதை சரிபார்த்த பிறகு பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்து எதையும் எடுத்து செல்லவில்லை. மேலும் இந்த சோதனையானது நீட் தேர்வு பிரச்சனையை திசை திருப்பவும் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்காகவும் நடத்தப்பட்டிருக்கிறது என உதவியாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |