7 கோடி ரூபாய் மதிப்பில் கோவிலின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை முருகன் கோவிலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு அவர்கள் வருகை தந்துள்ளார். இந்நிலையில் இவரை மாவட்ட கலெக்டரான கிருஷ்ணணுன்னி, இந்து அறநிலையத்துறை ஆணையரான ஜெ.குமரகுருபரன் ஆகியோர் வரவேற்றுள்ளனர். மேலும் கோவில் குருக்களின் சார்பில் அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன்பின் கோவில் சன்னதிக்குள் சென்று அமைச்சர் சேகர்பாபு, ஜெ.குமரகுருபரன் ஆகியோர் சிறப்பு சாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து கோவிலின் அன்னதான மண்டபம், புதிதாக தார் சாலை அமைத்தல் போன்ற பணிகள் விரைவில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் இதற்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரான எம். அன்னக்கொடி, கோவில் செயல் அலுவலர் எம்.அருள்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.