Categories
மாநில செய்திகள்

அமைச்சர் உதயநிதி வாரிசா?… இல்லன்னா துணிவா?…. நச்சுன்னு பதில் சொன்ன கவிஞர் வைரமுத்து….!!!!

தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகனின் நூற்றாண்டு விழாவை அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா நடந்தது.

இந்த கவியரங்கத்துக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். கவியரங்கத்தில் பாடல் ஆசிரியர்களான விவேகா, கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். அத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் கவிதைகளால் அன்பழகனுக்கு வைரமுத்து புகழாரம் சூட்டினார்.

இதையடுத்து உதயநிதி பற்றி வைரமுத்து பேசியதாவது, “அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி வாரிசா (அ) துணிவா என அனைவருக்கும் கேள்வி இருக்கிறது. ஆனால் உதயநிதி துணிவுமிக்க வாரிசு” என்று அவர் கூறினார்.  அவருடைய இப்பேச்சு பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது.

 

Categories

Tech |