துனிசியா நாட்டிலே அமைதி ஏற்படுத்துவதற்காக பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சி அவரை பணி நீக்கம் செய்யதுள்ளனர்.
ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் துனிசியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கொரோனா தொற்றை தவறாக கையாண்டதால் அரசின் மீது ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற கைஸ் சையத் இந்த தவறுக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
மேலும் இந்த அறிவிப்பு குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியினர் இது ஒரு திட்டமிடப்பட்ட சதி என்று குற்றம் சுமத்தியுள்ளனர். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அவசரகால பாதுகாப்பு கூட்டத்திற்கு பின் சையத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் உரையாற்றினார். அதில் “துனிசியா நாட்டில் சமூக அமைதி நிலவும் வரை நாங்கள் அரசை காப்பாற்ற சில தீர்மானங்கள் எடுத்துள்ளோம். இதனால் துனிசியா நாட்டின் பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சி அவர்களை பணி நீக்கம் செய்துள்ளோம்” என்று செய்தி வெளியிட்டுள்ளார்.