Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

அமலாபால் செய்த செயல்… புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை…. கண்டனம் தெரிவித்த ரசிகர்கள்….!!

நடிகை அமலாபால் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டதால் ரசிகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை அமலாபால் ‘சிந்து சமவெளி சர்ச்சை’ படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திருமணம், விவாகரத்து என்றெல்லாம் பரபரப்பாக இருந்த அவர் தற்போது மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘ஆடை’ படத்தின் நிர்வாணமாக நடித்து அதிரவைத்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தற்போது நடிக்கிறார். சமூக வலைத்தளத்தில் அமலாபால் சமீபகாலமாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ஆண் நண்பர்களுடன் மதுக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படங்கள், இன்னொரு ஆண் நண்பர் அருகில் நிற்க கடற்கரையில் படுத்திருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார். தற்சமயம் புகை பிடித்து, வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக வெளியிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதில்”எல்லா நற்பண்புகளும் சலவை செய்த துணிபோல இல்லை, எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை, எல்லா பாவிகளின் கையிலும் ரத்தம் இல்லை” என்றெல்லாம் தத்துவ பதிவையும் வெளியிட்டார். சமூக வலைத்தளத்தில் புகைப்பிடிக்கும் அமலாபாலுக்கு எதிராக ரசிகர்கள் பலரும் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Categories

Tech |