பாலிவுட் திரையுலகில் 1970-களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த பர்வீன் பாபியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வெப் சீரிஸில் நடிகை அமலாபால் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் மகேஷ் பட் இயக்கும் இந்த வெப் சீரிஸில் பர்வீன் பாபி கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்கிறார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படத்தின் இயக்குநர், இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றி பகிர்ந்துள்ளார். காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த வெப் சீரிஸில், நடிகர் தஹிர் ராஜ் பாசின், இயக்குநர் புஷ்ப்தீப் பாரத்வாஜ், நடிகை அம்ரிதா புரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்புப் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் இயக்குநர் மகேஷ் பட் அறிவித்துள்ளார். அமலாபால் நடிப்பில் வரும் காதலர் தினத்தன்று ‘அதோ அந்த பறவை போல’ படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
The magic of a new beginning! Our first web show, a dramatic love story goes on floors. Take a look at our wonderful cast @Amala_ams @TahirRajBhasin @_Amrita_Puri & Dir @PushpdeepBhardw @jiostudios @VisheshFilms pic.twitter.com/R4700jNEC5
— Mahesh Bhatt (@MaheshNBhatt) February 4, 2020