கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரான்ஸ் நாட்டில் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன .
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது . தற்போது அங்கு தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் இன்றுமுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன .
அதன்படி அனைத்து உணவகங்கள் ,மதுக்கடைகள் ,திரையரங்குகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவை முழுமையாக திறக்கப்பட்டு 100% வாடிக்கையாளர்களுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் விளையாட்டு கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ,வர்த்தக கண்காட்சி போன்றவை அனைத்தும் முழுமையாக திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
திருமணங்கள் ,மத விழாக்கள் போன்றவற்றிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அதோடு இறுதி சடங்குகளில் கலந்து கொள்வதற்கு கட்டுப்பாடுகள் ஏதுமில்லை.மேலும் இரவு விடுதிகள், டிஸ்கோ போன்றவற்றிக்கு அடுத்த மாதம் 9 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .அத்துடன் பொது மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் , பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.