தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
ஓட்டிற்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தப்படுகின்றது. இந்நிலையில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு லாரியில் இருந்து சென்ற ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான அதிமுகவினரின் 3520 குக்கர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. “ஜெயலலிதா பிறந்தநாள் விழா” என ஸ்டிக்கர் ஒட்டி எடுத்துச் சென்ற குக்கர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த முதல் நாளிலேயே முதல் கட்சியாக அமமுக சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.