அமமுக சார்பில் விரைவில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமமுகவின் தலைமையை கடுமையாக விசாரித்தன் அடிப்படையில் புகழேந்தியை கட்சியை விட்டு நீக்க வேண்டுமா? அல்லது இடைநீக்கம் செய்ய வேண்டுமா? என்பது குறித்து டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட கோவை நிர்வாகிகளை புகலேந்தி சந்தித்த வீடியோவை அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த புகழேந்தி தான் ஆறுதல் கூறவே அவர்களை சந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார். கட்சித் தலைமையை புகழேந்தி வெளிப்படையாக சாடி உள்ளதால் அவரை சஸ்பெண்ட் செய்வதா அல்லது டிஸ்மிஸ் செய்வதா என்று டிடிவி தினகரன் யோசித்து வருவதாகவும், விரைவில் நடவடிக்கை அவர் மீது அமமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.