Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபருக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர்… ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்பு… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் பனிப்புயல் காரணமாக அவர்களது ராணுவ ஹெலிகாப்டர் பணி பள்ளத்தாக்கில் தரை இறங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. மேலும் அவர்கள் அனைவரும் தாக்குதலுக்கு ஆளாக வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களின் மொழிபெயர்ப்பாளர் அமான் கலிலி உட்பட சிலர் அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட அமெரிக்க குழுவினர் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். ஆனால் அமான் கலிலி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தனது விசா பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களில் ஒருவரான அமான் கலிலி மற்றும் அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளது. அதன் பிறகு அமான் கலிலி மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |