Categories
அரசியல் மாநில செய்திகள்

#பயந்துட்டியா_கொமாரு…. அரண்ட ரஜினி… ஏமாந்த தொண்டர்கள்….. இந்தியளவில் ட்ரெண்டிங் …!!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த அவரின் அறிவிப்பு அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும்.  ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு.

முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. சட்டமன்றம் போய் , முதலமைச்சராக கேள்விக்கு பதில் சொல்ல நினைத்தது இல்லை. முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்தது கிடையாது.கட்சி தலைவராக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். படித்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட இளைஞரை முதலமைச்சராக்க வேண்டும்.

தமிழ்மக்களுக்காக அரசியல் புரட்சி நடக்க வேண்டும். புரட்சி நடக்காமல் , ஓட்டை பிரிக்க மட்டும் நான் அரசியலுக்கு வர வேண்டுமா ? வயது 71 ஆகிவிட்டது , உடலில் நிறைய காயங்கள் உள்ளன. எழுச்சி ஏற்படுத்துங்கள் , அரசியலுக்கு வருகிறேன்.வருங்கால முதல்வர் என்பதை விடுத்து எழுச்சி ஏற்படுத்துங்கள் அரசியலுக்கு வருகிறேன் என்று தெரிவித்தார்.

ரஜினி ரஜினியின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் அரசியலுக்கு உறுதியாக வருவதாக சொல்லவில்லை , தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் இருக்கின்றார் என்று பல்வேறு வகைகளில் ரஜினிகாந்த் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ட்வீட்டரில் #பயந்துட்டியா_கொமாரு  , #இலவுகாத்தகிளி_ரஜினி   என்ற இரண்டு ஹேஷ்டக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் ஏமாற்றம் அடைந்த ரஜினி ரசிகர்கள் , ரஜினிக்கு எதிரான கருத்துவாதிகள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/K5Mathan/status/1238029261987934208

 

 

Categories

Tech |