Categories
மாவட்ட செய்திகள்

ஆமாங்க குடுச்சுருக்கன் இப்ப என்ன…. ப்ரீதலைசர் கருவிலாம் ஊத முடியாது…. நான் யார் தெரியுமில்ல….!!!

எழும்பூரிலிருந்து மெரினாவிற்கு மது அருந்தி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பரிசோதனை செய்தபோது இளைஞன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் போலீசார் தினசரி இரவில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மற்றும் வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் என அனைத்தின் அடிப்படையிலும் பரிசோதனை நடத்துவது வழக்கம். அதன் படி எழும்பூரிலிருந்து மெரினா நோக்கி நேற்று இரவு பைக்கில்  வந்த ஒரு இளைஞரை பரிசோதனை நடத்துவதற்காக நிறுத்தியுள்ளார்கள்.

அதன்பிறகு போலீசார் இளைஞன் மது அருந்தி இருக்கிறானா இல்லையா என்ற அறிந்து கொள்வதற்காக ப்ரீதலைசர் கருவியைக் காட்டி அதில் உள்ள குழாய் வழியாக ஊதுமாறு கேட்டனர்.அந்த இளைஞரும் போலீசாரிடம் தான் மது அருந்தி இருப்பதாக கூறி உண்மையை ஒப்புக் கொண்டார். ஆனால் அந்தப் ப்ரீதலைசர் கருவி
உதவ மாட்டேன் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தால் அதற்கு போலீசார் இதை ஊதினால் தான் மதுவின் அளவு தெரியும் என்றார் .

அப்பொழுது தான் வழக்கு பதிவு செய்ய முடியும் என்று கூறினார்கள். ஆனால் அதனை மறுத்த இளைஞர் நான் யார் தெரியுமா என்னை யாரென்று தெரியவில்லையா எனது பின்னணி பற்றி தெரியுமா என கூறி அந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த போலீஸ் போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு போனில் தகவல் கொடுத்து அங்கு வரவழைத்தார்.

இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கு வந்தவுடன் அந்த இளைஞர் எதுவும் தெரியாதது போல் போட்டி பாம்பாக அடங்கி கையை கட்டி நின்றான். அந்த இளைஞரிடம் இன்ஸ்பெக்டர் விசாரித்த போது அவன் மீண்டும் அதே கதைகளை கூறியுள்ளான். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது பலத்த குரலில் அதட்டியவுடன்  ப்ரீதலைசர் கருவியைக் ஊதினான் அதில் 200 மில்லி கிராம் அளவு காண்பித்தது.

அதன்பிறகு அவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது  அவனிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது. போலீசார் அவனின் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி மெல்ல பொடிநடையாக நடந்து வீட்டுக்கு செல்லுமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |