இந்தியாவைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் 1200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்க வைத்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வாஷிங்டன் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த தீபன் ஷுகெர் என்பவர் வசித்து வருகிறார்.அவர் அங்குள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் கணக்குகள் சரி பார்க்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் நிர்வாகத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்குள்ள வாடிக்கையாளர்களின் 1200க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கி உள்ளார்.
உடனடியாக அந்தவாடிக்கையாளர் ஏன் கணக்குகளை முடக்கி வைத்துள்ளீர்கள் என்றுஅந்த நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். அதனால் நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இந்த நஷ்டத்தை ஏற்படுத்தியதற்கு அந்த நிறுவனம் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.