அமர்நாத் பாதயாத்திரை பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்புப்படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ஜம்மு காஷ்மீரின் மலை அடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோயிலின் புனித யாத்திரையை கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 15_ஆம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த புனித யாத்திரைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த வழித்தட பாதையில் பாகிஸ்தானில் தயாரிக்கப்படட கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவமே வெளியிட்டுள்ளது. மேலும் காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி எடுத்து வருவதாகவும் இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை தடுக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.