Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இருக்கையில் சாய்ந்து இருந்த வாலிபர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ரயிலின் இருக்கையில் அமர்ந்த நிலையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் வந்துள்ளது. இந்நிலையில் பயணிகள் அனைவரும் இறங்கிய போது 35 வயதுடைய வாலிபர் ஒருவர் இருக்கையில் சாய்ந்த நிலையில் இருந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இறந்த வாலிபர் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற கோடு போட்ட சட்டையும் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து இருந்திருக்கிறார். பின்னர் கையில் ஜெ.பி. என்றும் சிலுவையும் பச்சை குத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து இறந்த வாலிபர் யார் எந்த ஊரில் வசித்தவர் என ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |