உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் அழிக்கப்படுவது தீவிர கண்காணிப்பின் பலனாக கடந்தாண்டைவிட தற்போது 12 சதவீதம் குறைந்துள்ளதாக பிரேசில் தெரிவித்துள்ளது.
பிரேசில் நாட்டிலுள்ள உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து பிரேசில் அரசாங்கம் அமேசன் காடுகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் பலனாக தற்போது காடுகள் அழியும் சதவீதம் கடந்த ஆண்டைவிட 12% குறைந்துள்ளது. இதற்கிடையே உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பிரேசில் அரசாங்கம் அமேசான் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பான பிரச்சினைக்கு வருகின்ற 2028 க்குள் முழுமையாக தீர்வு எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.