இந்தியாவில் பிரதமர் மோடி சமீபத்தில் 5ஜி நெட்வொர்க் செய்வதை தொடங்கி வைத்தார் அதன் பிறகு மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையில் 5g சேவை தொடங்க உள்ளதாகவும்,மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் 5g சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை ரிலையன்ஸ் ஜியோ வியாழக்கிழமை மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய மூன்று நகரங்களில் பயிற்சி சேவைகளின் பீட்டா சோதனைகளை தொடங்கியது.
அப்போது பயனர்கள் 1Gbpsக்கும் அதிகமான பதிவிறக்கம் வேகத்தை பெறுவதாகவும், டெல்லியின் லுடியன்ஸ் மண்டலத்தில் உள்ள சாணக்கியபுரியில், பயனர்கள் 1Gbps க்கும் அதிகமான இணைய வேகத்தை பெற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் கூறியது, படிப்படியாக மக்கள் முழு நகரத்தில் 5ஜி சிக்னல்களை பெற தொடங்குவார்கள். ஜியோ தனித்த 5ஜி தொழில்நுட்பம் ட்ரூ5g என முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஜியோ வெல்கம் ஆபர் பயனர்கள் தற்போதுள்ள ஜியோ சிம் அல்லது 5g கைபேசியை மாற்ற தேவையில்லை, தானாகவே ஜியோ 5g சேவைக்கு அவர்கள் அப்டேட் செய்வார்கள். ஜியோ 5ஜி சேவைகளுடன் தங்களுடைய 5g கைபேசிகள் தடையின்றி வேலை செய்ய அனைத்து கைபேசி பிராண்டுகளுடனும் ஜியோ இணைத்து செயல்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யக்கூடிய 5ஜி சாதனங்களின் விரிவான வரம்பை பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.