பாயசம் கேசரி போன்ற இனிப்பு உணவுகள் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள் முந்திரி. முந்திரியின் தனிச்சுவை அதனை விரும்பி உண்பவர்களுக்கு மட்டுமே தெரியும் இக்காலக் குழந்தைகள் பலருக்கு முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடைக்கிறது என்று கூட தெரிய வாய்ப்பில்லை .
கொள்லாம் பழம் அல்லது முந்திரிப்பழம் என்று சொல்லக்கூடிய இந்த பழத்தின் விதையில் இருந்து தான் முந்திரிப்பருப்பு கிடைக்கிறது.
முந்திரிப்பருப்பு அதிக கொழுப்பு நிறைந்தது என பலரும் ஒதுக்கி விடுவது உண்டு ஆனால் முந்திரியில் இருக்கக்கூடிய கொழுப்புகள் நம் உடல்நலத்திற்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு இதில் அடங்கி இருக்கிறது.
இதை தவிர 100 கிராம் முந்திரியில் 550 கலோரிகள் தாமிரம் துத்தநாகம் மக்னீசியம் மாங்கனீசு போன்ற தாது சத்துக்களும், நார்ச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி ,கால்சியம்,குரோமியம், போன்ற சத்துக்களும் அடங்கி இருக்கு.
இவ்வளவு சத்துக்கள் கொண்ட இந்த முந்திரி பருப்பின் தினமும் சாப்பிட்டுவர கிடைக்கக்கூடிய நன்மைகள்.
எலும்பு வலிமைக்கு கால்சியம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு மெக்னீசியமும் முக்கியமான சத்து. இது முந்திரிப் பருப்பில் நல்ல அளவில் இருக்கிறது. எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கிறது மெக்னீசியம் இதன் மூலமாக எலும்புகள் ஆரோக்கியமாகவும் நல்ல வலிமையுடன் இருப்பதற்கு உதவி செய்கிறது.
தினமும் 4 முதல் 5 முந்திரிப் பருப்பிநை சாப்பிட்டுவர எலும்புகள் வலுவாகும் மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
ரத்த அழுத்தம் சீராக இருக்கும் அதிக ரத்த அழுத்தம் மற்றும் எப்போதும் வேலை என பதட்டமான மனநிலையில் இருக்கிறவங்க தினமும் இந்த முந்திரிப் பருப்பை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஒரு நல்ல சீரான மனநிலை வருவதற்கு உதவி செய்கிறது.
மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான பாலி அன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் முந்திரியில் நிறைந்திருக்கிறது. இது மூளையில் புதிய செல்கள் உற்பத்தி அதிகரிக்கும். மூலையில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு தேவையான ரசாயனத்தைச் சுரக்க உதவி செய்கிறது .இதன் மூலமாக மூளை நன்கு ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.