Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா !!!

செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா

தேவையான  பொருட்கள் :

பன்னீர் – 1 கப்

தக்காளி –  2

வெங்காயம் – 2

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

கிராம்பு –  2

பட்டை –  சிறிய துண்டு

பிரியாணி இலை –  1

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் –  தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

காய்ந்த மிளகாய் – 5

மிளகு – 10

சீரகம் – 1 டீஸ்பூன்

முந்திரி – 10

கசகசா – 1  டீஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

பூண்டு – 6 பல்

வெந்தயம் –  1  டீஸ்பூன்

மஞ்சள் தூள் –  1 டீஸ்பூன்

பன்னீர் க்கான பட முடிவு

செய்முறை:

முதலில்  மிக்சியில்  காய்ந்த மிளகாய் , மிளகு  , சீரகம் , முந்திரி , கசகசா , இஞ்சி , பூண்டு ,வெந்தயம் ,மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ள  வேண்டும். ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு  உளுத்தம்பருப்பு, வெந்தயம், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, கறிவேப்பிலை போட்டு   அரைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவேண்டும் . பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கி,  சிறிது தண்ணீர்,  உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து கொதிக்கவிட்டு,   கொத்தமல்லி தூவி இறக்கினால் அசத்தலான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா  தயார்!!!

Categories

Tech |