இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர் மிட்சல் சான்ட்னர் பறவையைப் போல் பறந்து பிடித்த கேட்ச் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டி20 தொடருக்குப் பிறகு, டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் வாட்லிங், சான்ட்னர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், நியூசிலாந்து அணியின் சான்ட்னர் பிடித்த கேட்ச் தற்போது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து வீரர் போப் 6 ரன்கள் எடுத்திருந்த போது, நியூசிலாந்து அணியின் வாக்னர் ஃபுல் – டாஸ் பந்தை வீசினார். இதனை போப் கவர் சைடில் அடிக்க முயன்றார்.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அட்டாக்கிங் ஃபீல்டிங்கில் வீரர்களை நிறுத்தியதால், கவர் பாயின்டில் நின்ற சான்ட்னர், பறவையைப் போல் பறந்து அட்டகாசமான கேட்ச்சைப் பிடித்தார். இந்த வீடியோ, நியூசிலாந்து அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.இந்தப் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய மூன்றிலும் அசத்திய சான்ட்னரை ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
Trending ➡️ Santner#NZvENG #cricketnation pic.twitter.com/l0TamFlQue
— BLACKCAPS (@BLACKCAPS) November 25, 2019