தேனீக்களிடம் கொட்டு வாங்கினால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்படுவது குறித்து ஒரு செய்தி தொகுப்பு பார்க்கலாம்.
கொரோனா அச்சம் எங்கும் பரவி இருக்கும் நிலையில் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பலரும் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் யாரும் கேள்விப்பட்டிராத ஒரு மருத்துவ முறை கொரோனவை எதிர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்றால் நமக்கு ஆச்சரியம் தான். உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் தேன் பல வழிகளில் நன்மை தரக்கூடியது என்பது நாம் அறிந்ததே. ஆனால் தேன்களை உருவாக்கும் தேனீக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம்.
தேனீக்கள் கொட்டினால் தடித்து போகும், சிலருக்கு பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தாண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற செய்தி நமக்கு புதிது தான். ஆனால் வெளிநாடுகளில் இந்த தேனீக்களினால் கொடுக்கப்படும் சிகிச்சையை வெகு பிரசித்தம். சர்க்கரை நோய், வாதம் உள்ளிட்ட நோய்களுக்கு தேனீக்களை கொட்ட வைத்து சிகிச்சை கொடுக்கும் முறையும் உண்டாம்.
மதுரையில் பல ஆண்டுகளாக தேனீ வளர்ப்பில் பிரபலமான விபிஸ் (இயற்க்கை தேனீ பண்ணை) இதுவரை ஆயிரக்கணக்கான தேனீக்களிடம் கொட்டுகள் வாங்கியதாகவும், 10ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு காய்ச்சல் வந்ததில்லை என்றும் கூறுகின்றார். தொடர்ச்சியாக தேனீக்கள் கொட்டுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளதாக கூறும் அவர், தேனீக்கள் கொட்டினால் பயப்பட தேவையில்லை, அது நன்மைதான் என்று தெரிவிக்கின்றார். தேனீயின் விஷத்தன்மை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகளே நெருங்காத போது கொரோனாவும் நிச்சயம் நெருங்கவே வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
அடர்ந்த வனங்களில் உள்ள மலைத் தேனீக்கள் கொடிய விஷத்தன்மை கொண்டதால் அவற்றை நெருங்காமல் இருப்பது நல்லது. அதே நேரம் வளர்ப்பு தேனீக்கள் கொட்டுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதற்கு தன்னையே ஆதாரமாக காட்டுகின்றார் ஜோஸ்பின். தேனீக்களை வளர்ப்பதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்பதோடு, நல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை என்பதால் தேனீ வளர்பில் தன்னை ஒரு அடையாளமான பெண்மணியாகவே மாற்றி இருக்கின்றார் அவர்.