Categories
பல்சுவை

ஆறறிவு உடையவன் வாழ அன்னை தெரசாவின் அற்புத வரிகள் ..!!

அனைவரிடமும் அன்பு செலுத்தி வாழ அன்னை தெரசா கூறும் அறிவுரைகள் பின்வருமாறு : 

கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டுமே அன்னையாக முடியும் !

கருணையுற்றால் ஆயிரம் குழந்தைக்கு கூட அன்னையாக முடியும் !

எதுவுமே நிரந்தரமில்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும் ?

கவலையை விடுங்கள் வாழ்க்கையை முதலில் வாழ தொடங்குங்கள் !

மற்றவைகளை எடை போடுவதில் காலத்தை வீணாக்காதீர்கள் !

ஏனெனில் அவர்களை நேசிப்பதசொற்களால் ற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போகும் !

அன்பு செலுத்துங்கள் காலம் மிகக் குறைவாக இருக்கிறது !

Related image

அன்பு சொற்களில் வாழ்வதில்லை !

அன்பை சொற்களால் விளக்கவும் முடியாது !

செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு !

இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் !

தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய் !

ஆனால் மன்னிப்பதற்கு தாமதம் கூட செய்யாதே !

உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளை விட பெரியது !

புன்னகையே அன்பின் சின்னம் !

புன்னகையே நாம் பிறருக்கு கொடுக்கும் அழகிய பரிசு !

வீழ்ந்தவருக்கு உதவுவதே அன்பான செயலாகும் !

வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள் !

Categories

Tech |