Categories
தேசிய செய்திகள்

Amazon, Flipkart உள்ளிட்ட தளங்களுக்கு…. வரும் 26 முதல் கட்டுப்பாடு…. மத்திய அரசு முடிவு…!!!!

மத்திய அரசு, ஆன்லைன் வணிக இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத போலி மதிப்பீடுகளை கட்டுப்படுத்த  முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக  அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் மதிப்பீடுகளைச் சரிபார்க்க புதிய வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடவுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் வரும் 26ம் தேதி அமலாகும் என நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. போலி மதிப்பீடுகளை நம்ப்பி பொருட்களை வாங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தடுக்க இந்த வழிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

Categories

Tech |