Categories
உலக செய்திகள்

பருவநிலை மாறுபாட்டை சமாளிக்க… ரூ 71,000 கோடி நன்கொடை…. அமேசான் நிறுவனர்!

பருவநிலை மாறுபாடு பிரச்சனைகளை சமாளிக்க அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்  71,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளார்.

இது தொடர்பாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், பருவநிலை மாறுபாடு தான் பூமியின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் புவி நிதி என்ற பெயரில், 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 71,000 கோடி) நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இயற்கையை உலகை பாதுகாக்கவும், பருவநிலை மாறுபாடுகளை தடுக்கவும் சாத்தியமான தீர்வுகளை கண்டறிய முயற்சி செய்து வரும் விஞ்ஞானிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். வரும் கோடை காலம் முதல் இந்த நிதியை பகிர்ந்தளிக்க உள்ளதாக தெரிவித்துள்ள பெசோஸ், அனைவரும் ஓன்று சேர்ந்து பூமியை பாதுகாப்போம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.instagram.com/p/B8rWKFnnQ5c/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |