Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. ஒரு டிக்கெட் 205 கோடி ரூபாயா..? அமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணம்..!!

அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெஸாஸ் உடன் விண்வெளி பயணம் மேற்கொள்பவருக்கான டிக்கெட் 205 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதியில், தன் சகோதரருடன் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருடன் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலமானது 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்களில் தொடங்கியது.

இதில் 159 நாடுகளிலிருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். கடைசியாக 28 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 205 கோடி) இந்த டிக்கெட் ஏலம் போனது. பெஸாஸின் ‘Blue Origin’ நிறுவனமானது, New Shepard ராக்கெட் மூலமாக முதன்முதலாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவிருக்கிறது.

இதில் பெஸாஸ், அவரது சகோதரர் மற்றும் ஏலத்தில் டிக்கெட்டை வென்ற நபரும் 11 நிமிடங்கள் மட்டுமே பயணிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |