அமேசான் நிறுவனம் தனது ஃபிரீடம் சேல் விற்பனையை விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம் தனது ஃபிரீடம் சேல் விற்பனையை ஆகஸ்ட் 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனைக்காக எஸ்பிஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனாளர்கள் அனைவரும் 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரைம் உறுப்பினர்களுக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு இந்த ஃபிரீடம் சேல் துவங்கவுள்ளது. மொபைல் மற்றும் அதைச் சார்ந்த அணைத்து சாதனங்களுக்கும் 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ்7, சாம்சங் கேலக்சி நோட்9, ஒப்போ ரெனோ, என பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை வழங்கியுள்ளது. சாம்சங் கேலக்சிS10, சாம்சங் கேலக்சிM40, சாம்சங் கேலக்சிM30, ஒப்போA7, ரெட்மீ Y3, , ஹானர் வியூ20, மற்றும் ஒப்போK3 ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகமாக உள்ள ஹூவாய் Y9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனும் இந்த ஃப்ரீடம் சேல் விற்பனையில் வருகிறது என்பது ஒரு சிறப்பம்சம்.
எலக்ட்ரானிக்ஸ் வகையை பொறுத்த வரை ஸ்மார்ட்வாட்ச்கள், கேமராக்கள், ஹெட்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 50 முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருள்களான உடைகள், பூந்தொட்டிகள், மெத்தைகள் போன்ற பல்வேறு வகைகளுக்கும் விலைக் குறைப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த ஃபிரீடம் சேல் வாயிலாக வாடிக்கையாளர்கள் அனைவரும் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.