அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமானதுதான் அமேசான் பே ஆப் (Amazon Pay App). இந்த ஆப் கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் ஆகிய பிற நிறுவனங்களின் பேமெண்ட் செயலிகளை போன்றது ஆகும். அமேசான் பே செயலியில் இ-வாலட் சேவையானது இருக்கிறது. இவற்றில் பொதுவாக வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை அமேசான் இ வாலட்டிற்கு மாற்றுவது எப்படி..? என்பதை தெரிந்து வைத்திருப்பர். எனினும் இ வாலட்டிலிருந்து வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்றுவது பற்றி பல பேருக்கும் தெரிவதில்லை.
நீங்கள் அமேசான் பேமெண்ட் செயலியில் முழுமையாக கே.ஒய்.சி முடித்து இருந்தால், அமேசான் பே பேலன்ஸை பேங்க் அக்கவுண்டிற்கு மாற்றமுடியும். அதற்கு முதலாவதாக உங்களது மொபைலில் அமேசான் ஆப்பை திறக்கவேண்டும். அதன்பின் அமேசான் பே செக்ஷனுக்கு செல்லவேண்டும். அடுத்ததாக சென்ட் மணி என்பதனை கிளிக் செய்யவும். தற்போது டூ பேங்க் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அங்கு உங்களது அமேசான் பே பேலன்ஸை டிரான்ஸ்பர் செய்ய விரும்பும் பேங்க் அக்கவுண்ட்டின் விபரங்களை பதிவிடவேண்டும்.
விபரங்களை சரியாக கொடுத்த பிறகு பே நவ் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அமேசான்பே பேலன்ஸிலிருந்து எவ்வளவு தொகையை டிரான்ஸ்பர் செய்ய விரும்புகிறீர்களோ, அதனை உள்ளிட்டு கன்ட்டிநியூ பட்டனை கிளிக் செய்யவும். தற்போது உங்களது மொபைல் ஸ்க்ரீனில் கீழ் பகுதியில் ஒரு பாப்-மெனு தோன்றும். அவற்றில் அமேசான் பே பேலன்ஸ் வாயிலாக பணம் செலுத்துவதற்குரிய ஆப்சனை பார்த்தால், அதனை கிளிக் செய்யவும்.
ஒரு வேளை மேற்குறிப்பிட்ட ஆப்சன் காணப்படவில்லை எனில், ஷோ மோர் என்ற விருப்பத்தை கிளிக்செய்து, அதனுள் அமேசான் பே பேலன்ஸ் வாயிலாக பணம் செலுத்துவதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் கன்ட்டிநியூ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இந்நிலையில் உங்களது அமேசான்பே பேலன்ஸில் இருக்கும் பணம் வங்கிகணக்கிற்கு மாற்றப்படும்.