அமேசான் நிறுவனம் பிரைம் சந்தாவை டிசம்பர் இரண்டாவது வாரம் முதல் 50 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஓராண்டுக்கான பிரைம் சந்தா 500 ரூபாய் உயர்ந்து 1,499 ரூபாயாக இருக்கும். ஓராண்டுக்கான 999 ரூபாய் சந்தா டிசம்பர் 13ஆம் தேதி வரை இருக்கும் என்பதால் முன்கூட்டியே ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள். டிசம்பர் 13-ம் தேதிக்கு பிறகு 3 மாத திட்டம் 459 ரூபாய்க்கும், ஒரு மாத திட்டம் 179 ரூபாய்க்கும் கிடைக்கும். இந்த அறிவிப்பை அமேசான் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து கொள்வது நல்லது.
Categories