Categories
டெக்னாலஜி பல்சுவை

வீட்டிலிருந்த மாணவர்களை குறிவைத்த அமேசான் …!!

வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுக்காக அமேசான் புதிய பிரிவு ஒன்றை தொடங்கியுள்ளது

கொரோனா  தொற்று பரவலினால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் வீட்டிலிருந்தே படிக்கும் மாணவர்களுக்காக அவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களை உள்ளடக்கிய புது பிரிவு ஒன்றை தொடங்கப் போவதாக அறிவித்திருந்தது. அதன்படி புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் பிரிவில் வீட்டிலிருந்து பயிலும் மாணவர்களுக்கு தேவைப்படும் லேப்டாப், ஸ்பீக்கர், பேனா, கணினி, பிரின்டர் போன்ற கருவிகள் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ஊரடங்கு சமயத்தில் இணையதளத்தில் இயர் போன்கள் தேடுபவர்களின் எண்ணிக்கை 1.7 மடங்கும், வை-பை ரவுட்டர் தேடுபவர்கள் எண்ணிக்கை மூன்று மடங்கும் ,லேப்டாப், டேப்லட் ஆகியவற்றை தேடுபவர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கும், புத்தகம் வைக்கும் மேஜைகளை தேடுபவர்களின் எண்ணிக்கை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி இந்த புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. school  from home என பெயரிடப்பட்ட இந்த பிரிவில் மாணவர்கள் வீட்டிலிருந்து படிக்கத் தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது”.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |