அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் என்பவர் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் அவர்களின் சொத்து மதிப்பு 191.2 பில்லியன் டாலர்கள் என புளும்பர்க் பில்லியனர் இன்டெக்ஸ் கூறுகிறது. டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் 2 ஆம் இடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது .3 ஆண்டுகளாக அமேசான் நிறுவனர் பெசாஸ் முதலிடத்தில் இருந்த நிலையில் கடந்த மாதம் டெஸ்லா நிறுவன தலைவர் எலோன் மஸ்க் அவரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார்.இதனால் 2 ஆம் இடத்திலிருந்த அமேசான் நிறுவனர் பெசாஸ் தற்போது வந்துள்ளார்.செவ்வாய் அன்று டெஸ்லா பங்குகள் பங்குச் சந்தையில் 2.4% குறைந்ததால் மஸ்க்கின் சொத்தில் 4.6 பில்லியன் டாலர்கள் குறைந்தது. இதனால் எலோன் மஸ்க் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முன்னதாக டெஸ்லா நிறுவன பங்குகள் உயர்வாக இருந்ததால் முதல் இடத்தில் இருந்துள்ளார்.ஆனால் தற்போது அமேசான் நிறுவனர் டெஸ்லாவை காட்டிலும் 995 மில்லியன் டாலர்கள் கூடுதலாக உள்ளதால் முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்லா ஒரு எலக்ட்ரிக் கார் நிறுவனம் 2020 இல் சரியான இலக்குகளை எட்டியதால் அதன் சந்தை மூலதனம் கடுமையாக அதிகரித்தது. டெஸ்லா நிறுவனரான எலோன் மஸ்க்கின் டிவீட்டால் கேம்ஸ்டாப் கார்பொரேஷன் ,ஷாப்பிங் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் சிக்னல் நிறுவனங்களில் விலை ஏறி உலகத்தையே ஆட்டம் காண செய்தது. கிரிப்டோ கரன்சிகளின் விலைகளும்அவரது ட்வீட் பதிவுகளால் விலை எகிறியது.1995 ஆம் ஆண்டு அமேசானை ஆன்லைன் புக் ஸ்டோர் ஆக தொடங்கினார் .இப்போது 1.7 டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இ-காமமெர்ஸ் ஜெயன்ட்டாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.