அமேசான் காட்டுத்தீயை அணைக்க ஜி7 நாடுகள் வழங்கும் 160 கோடி வேண்டாமென்று பிரேசில் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் நடைபெற்றுவரும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற்றனர். உலகில் மாறி வரும் பருவநிலை மற்றம் குறித்தும் , அமேசான் காட்டு தீ குறித்தும் ஜி 7 மாநாட்டில் பேசப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் அமேசான் காட்டு தீயை அணைக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.அந்த வகையில் அமேசான் மழைக்காடுகளில் தீயை அணைக்க ஜி7 நாடுகள் சுமார் ரூ.160 கோடி வழங்கும் என அறிவித்தது.
ஆனால் ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை என்று பிரேசில் நாடு நிராகரித்துள்ளது .இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் காட்டு தீயை அணைக்க பிரேசில் 44,000 இராணுவ வீரர்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஜி7 நாடுகள் உதவ முன்வந்து பிரேசில் நாடு வேண்டாமென்று நிராகரித்துள்ளது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.