Categories
உலக செய்திகள்

தானத்தில் சிறந்த தானம்….. அமேசான் ஓனர் செய்த செயல்…. குவியும் பாராட்டு…!!

அமேசானின் நிறுவனர் செய்த செயல் ஒன்று உலக அளவில் அவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. 

உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இதனை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட காரணத்தினால், பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஏழை குழந்தைகள் தங்களது கல்வி படிப்பை தொடர்வதில் சிக்கல் என்பது பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஏன் உதாரணத்திற்கு தமிழகத்திலும் கூட, தற்போது ஆன்லைன் வகுப்பு நடைபெறுவதால், மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய பழங்குடியின மாணவர்களால் தற்போது அவர்களது படிப்பை தொடர முடியவில்லை.

இச்சூழலில், அமேசான் நிறுவனரும்,  உலகின் மிகப்பெரிய பணக்காரருமான ஜெஃப்  பெசோஸ் ஏழை, எளிய குழந்தைகள் படிப்பதற்காக இலவச மழலையர் பள்ளி தொடங்கி இருப்பது  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பள்ளிக்கு Bezos Academy Schools என அவர் பெயர் வைத்துள்ளார்.

குழந்தையின் ஆரம்ப கால கல்வி தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக அவர் இந்த செயலில்  ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். ஆனால், அதைவிட சிறந்த தானம் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக அளிக்கும் நானும்தான் சிறந்த தானம்.

Categories

Tech |