அமேசானின் சுதந்திர தின விற்பனை 2020 நாளையுடன் முடிவடைகிறது.
இந்தியாவில் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி பல்வேறு ஆன்லைன் நிறுவனங்களும் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அமேசான் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமேசானின் சுதந்திர தின விற்பனை 2020 நாளையுடன் (ஆகஸ்ட் 11) முடிவடைகிறது. கடந்த ஆகஸ்டு 8ஆம் தேதி தொடங்கிய இந்த பிரைம் டே விற்பனையில் ஸ்மார்ட் போன், லேப்டாப், டிவி என அனைத்து பொருட்களும் அதிரடியாக விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் பிரைம் சந்தாதாரர்கள் மட்டுமின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.