Categories
மாநில செய்திகள்

ஆம்பன் புயலால் சென்னை மெரினா, புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்…!

ஆம்பன் புயல் காரணமாக சென்னையில் அலைகள் உயரமாக எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

மெரினா, கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினம்பாக்கத்தில் வழக்கத்தை விட உயரமாக அலைகள் எழுந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. ஆம்பன் புயல் காரணமாக இரவு முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் விடாமல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால், மீனவர்களின் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் 5 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த புயல் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. மூன்று நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது. நேற்று இந்த புயல் அதிதீவிர சூப்பர் புயலாக மாறியது.

இந்த நிலையில் தற்போது, அதி-உச்ச-உயர் புயலாக உருவான ஆம்பன் புயல் படிப்படியாக வலுவிழந்து அதிதீவிர புயலாக மாறிவிட்டது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல், நாளை மாலை வங்காள தேசத்தில் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் கொல்கத்தா நகருக்கு தென்கிழக்கே கடலில் 700 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |