Categories
தேசிய செய்திகள்

அம்பானி வீட்டின் அருகே இருந்த வெடிகுண்டு கார் வழக்கு… உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்…!!!

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே இருந்த வெடிகுண்டு கார் வழக்கில் சச்சின் வாசி உடன் பணியாற்றிய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானியின் 27 மாடி அன்டிலா குடியிருப்பு அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில் காரின் உரிமையாளர் மார்ச் 5-ம் தேதி மும்பை கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றப்புலனாய்வு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே கைது செய்யப்பட்டார்.

இவரிடம் நடத்திய விசாரணையில் அவருடன் பணியாற்றிய உதவி இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசிக்கும் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்ததால் அவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரியாஸ் காசி பணியிடம் நீக்கப்பட்டார் என்ற தகவலை மும்பை போலீஸ் கமிஷனர் வெளியிட்டார்.

Categories

Tech |