திருப்பூரில் 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கர்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவரது வீட்டின் அருகிலேயே அவரது உறவினர் மகனான 17 வயது சிறுவன் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவனுக்கு அவனது பள்ளியில் படிக்கும் வேறொரு பெண்ணின் மீது காதல் ஏற்பட்டது. படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் பள்ளி படிப்பை முடித்துக்கொண்ட 15 வயது சிறுமியை வைத்து தனது காதலிக்கு சிறுவன் தூது அனுப்பியுள்ளார்.
இவ்வாறு இருக்கையில் ஒருநாள் சிறுமியின் மீது ஆசைப்பட்ட அந்த சிறுவன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். இதையடுத்து சிறுமி வீட்டில் இல்லாத சமயத்தில் உள்ளே நுழைந்து கட்டாய படுத்தி அவரை பலாத்காரம் செய்துவிட்டு இதை பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதை யாரிடமும் சிறுமி சொல்லாமலிருக்க நாட்கள் செல்லச் செல்ல உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமணையில் பரிசோதித்த போது,
அவர் 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது தெரியவர, பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரிக்கையில், நடந்ததை கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதையடுத்து தாராபுரம் காவல் நிலையத்தில் சிறுவன் மீது புகார் அளிக்கப்பட புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் சிறுவனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.