Categories
சென்னை மாநில செய்திகள்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் மனு..!!

கல்வி கட்டண சலுகை கோரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கொரோனா காலத்தில் 2020 – 2021 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சட்டம் பயின்று வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டு சட்டம் பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு கணக்கின்படி இணையம், நூலகம், விளையாட்டு, உள்கட்டமைப்பு, சேர்க்கை கட்டண உள்ளிட்டவைகளுக்கு சேர்த்து இந்த ஆண்டும் கல்விக் கட்டணம் செலுத்த கோரி பல்கலைக்கழக நிர்வாகம் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை எதிர்த்து அப்பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் 90 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில் ஊரடங்கு காலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் அடைக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழக நிர்வாக குறிப்பிட்டுள்ள எந்த வசதியும் பெறாமல் கல்விக்கட்டணம் சட்டத்திற்கு   புறம்பானது என குறிப்பிட்ட மாணவர்கள், செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த  பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகம் அறிவித்துள்ள  கல்வி கட்டணத்தை குறைத்து அறிவிக்க வேண்டும் என்று குறைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை  செலுத்த கால அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Categories

Tech |