Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களுடைய பூஜை அறையில் இருக்க வேண்டிய படம் அம்பேத்கர்: தமிழன் பிரசன்னா

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பாபாசாகேப் அம்பேத்கர் இருக்கிறார். பொய் சொல்லுங்க உங்க பிள்ளைங்க கிட்ட….  எதோ அம்பேத்கர் அப்படின்னா…  இந்தியா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார், அவர் ஒரு தலைவர் அப்படி நம்ம பிள்ளைங்க படிச்சுட்டு போறாங்க.  இல்லை….  இந்தியாவில் இருக்கிற எல்லா பெண்களுடைய கோவில் பூஜை அறையிலும் இருக்க வேண்டிய படம் பாபாசாகிப் அம்பேத்கருடைய படம்.

ஏன் தெரியுமா ? அவர்தான் முதல் சட்ட அமைச்சர்.ஹிந்து கோப்பில் திருத்தம் கொண்டு வருகிறார்கள். கோப்பில் திருத்தம் கொண்டு வந்து,  என்ன சொன்னார் என்றால் ? பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும்,  அம்பேத்கர் சொன்னார். பெண்ணுக்கு கணவர்  பிடிக்கலேன்னா விவாகரத்து பண்ணனும். மூன்றாவது பெண்ணுக்கு தேவை என்றால் பிள்ளை பெறாமல் சுவீகாரம் செய்து கொள்கின்ற ( தத்தெடுக்கின்ற ) உரிமை வேண்டும்.

இது மூன்றையும் பாராளுமன்றத்தில் வைக்கின்றார். சட்டம் தோற்றுப் போகிறது. தோற்று போனதும் ராஜினாமா பண்ணிட்டு வெளியே வந்து சொல்றாரு,  நான் வருத்தத்தோடு நிற்கிறேன். இன்றைக்கு இல்ல. இன்னும் 50 ஆண்டுகள் கழித்து பெண்ணை  போக பொருளாக பார்க்கின்ற நிலை மாறவேண்டும் என்றால்,  இன்றைக்கு அவர்களுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும்.

திருமண பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்கிற உரிமை வேண்டும். தத்தெடுக்கின்ற உரிமை வேண்டும். இது அவர்களுடைய காலச் சூழலை மாற்றும் என்று அம்பேத்கர் சொன்னார். சட்டம் தோற்றுப்போனது.  மிகுந்த வலியோடு…  பெண் சமூகத்திற்கு உரிமைக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்தேன். ஆனால் என்னால் இதை நிறைவேற்ற முடியவில்லை. ஆகவே ராஜினாமா செய்கிறேன் என அம்பேத்கர் ராஜினாமா செய்து விட்டு போனார் என பேசினார்.

Categories

Tech |