பொதுவாக மேடைப் பேச்சுகளில் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தவறாக உளறுவது வழக்கம். ஆட்சியில் இருக்கும் அதிமுக அமைச்சர்கள் உளறுவது போன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உளறுவதை நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர்.
சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் வேன் மீது ஏறி பொதுமக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது “இன்றைக்கு ஆட்சிக்கு வருகிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்டாலின் அவர்கள் என உளறி கொட்டினார்.. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது இதனை தொடர்ந்து ஒரு வீடியோவில் பாபாசாகேப் அம்பேத்கர் என சொல்வதற்கு பதில் பாப்பு சாகேப் அம்பேத்கர் என்று சொல்லியுள்ளார்.
பழனி மீது கொடூர தாக்குதல் pic.twitter.com/uTvUhjoUnJ
— Savukku_Shankar (@savukku) January 29, 2021
இதனை தொடர்ந்து “அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது” என்று புது வரலாற்று ஒன்றை படைத்துள்ளார். இதனையும் நெட்டிசன்கள் வைரல் ஆகி வருகின்றனர். தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் துண்டு சீட்டு வைத்து படிப்பது குறித்து விமர்சித்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த உளறல் வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.