Categories
உலக செய்திகள்

பிரபல நடிகரின் முன்னாள் மனைவி மீது அவதூறு வழக்கு… 10.35 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு…!!!

பிரபல நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவிக்கு 10.35 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டிருக்கிறது.

பிரபல நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியான ஆம்பர் ஹேர்டு, ஜானியால் தான்  பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை அனுபவித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்குமாறும் கோரியிருந்தார். அதே சமயத்தில், ஜானி டெப் முன்னாள் மனைவியான ஆம்பர் தன் பெயரை கெடுக்கும் விதமாக இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார் என்றும் இதற்கு தகுந்த விசாரணை மேற்கொள்ளுமாறும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் ஜானி டெப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் ஆம்பர் ஜானி டெப்பிற்கு 78 கோடி ரூபாய் இழப்பீடும், 38 கோடி ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், தற்போது ஜானி டெப்பின் பெயரை கெடுக்கும் நோக்கில் வழக்கு தொடர்ந்த ஆம்பர் மொத்தமாக 10.35 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

 

Categories

Tech |