தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கின்றது. தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாக வாய்ப்பு இருக்கின்றது. அதே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 17ஆம் தேதி வடமேற்கு திசையிலும்,
அதன் பிறகு வட கிழக்குத் திசையில் நகர வாய்ப்பு இருக்கின்றது. இதனால் கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. காற்று பலமாக வீசும் என்பதால் வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.