ஆம்பன் புயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் 25 பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என பிரதமர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலில் இருந்து சூப்பர் புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் மிக பலமான சூறாவளி காற்று வீசக்கூடும், என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகலயா ஆகிய 5 மாநிலங்களவை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் வங்கதேசத்தின் ஹாதியா தீவுக்கும் இடையே மே 20ம் தேதி இரவு இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆம்பல் புயல் குறித்து பருவநிலை மாற்றம் குறித்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில் புயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் 25 பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என பிரதமர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில் மேலும் 24 பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளது.