நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் கடந்த 10-ஆம் தேதி முதல் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்லக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் காலை 6 மணி முதல் திம்பம் மலை பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரிலிருந்து நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த ஆம்புலன்ஸ் தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் காரப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்த போது கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. சுமார் 30 நிமிடங்கள் நகரமுடியாமல் ஆம்புலன்ஸ் ஒரே இடத்திலேயே நின்றுள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் ஆம்புலன்சுக்கு இடம் ஏற்படுத்தி கொடுத்த பிறகு நோயாளியுடன் ஆம்புலன்ஸ் கோவை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.