கொட்டும் மழையிலும் சாலையின் நடுவே ஆண் ஒருவரின் சடலம் அனாதையாக கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்நாத். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை அரசு பஸ் பணிமனை அருகே சென்றுள்ளார். அந்த நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக இருந்துள்ளது. இதனால் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது அவர் பின்னால் வந்த வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதனால் கீழே விழுந்து பலத்த காயமடைந்து பிரேம்நாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கொட்டும் மழையிலும் சாலையின் நடுவே சடலம் அனாதையாக கிடந்துள்ளது. இதையடுத்து சிறிது நேரத்தில் வந்த ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.