Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிகரெட் கேட்ட வாடிக்கையாளர்…. டிரைவருக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

ஆம்புலன்ஸ் டிரைவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரியகுளம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸில் டிரைவராக உள்ளார். மேலும் இவர் காரியகுளம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர் கடைக்கு சிகரெட் கேட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து செந்தில்குமார் அவரிடம் சிகரெட் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் செந்தில்குமாரின் இடது கையில் உள்ள மூன்று விரல்கள் துண்டானது. இதனையடுத்து செந்தில்குமார் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ராதாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |