திருவள்ளூரில் விபத்துக்குள்ளாகி மயங்கிய நிலையில் இருந்த பெண்களிடம் இருந்து 4 சவரன் நகையை திருடி சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. இவர் தனது சகோதரிகளான லாவண்யா, சரண்யா உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. பின் அவர்களை காப்பாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக அவ்விடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மூவரையும் மீட்டு ஏற்றிச் சென்றது.
இதில் செல்லும் வழியிலேயே ராஜு பரிதாபமாக உயிர் இழந்தார். லாவண்யா, சரண்யா ஆகியோர் மயக்க நிலையில் இருந்தனர். இந்நிலையில் சிகிச்சைக்குப் பின் அவர் கண் விழித்துப் பார்த்தபொழுது அவரது 4 சவரன் நகையை காணவில்லை. பின் பதற்றம் அடைந்த அவர், இது குறித்து காவல்துறையில் அவர் புகார் அளித்தார். அதில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சாதாரண மயக்க நிலையில் இருந்த என்னிடம் இருந்து நகையை பறித்ததாக ஞாபகம் இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் டிரைவரை காவல்துறையினர் விசாரிப்பதற்காக தேடி வருகின்றனர்.