Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸ்-லாரி மோதல்…. அதிர்ச்சியில் போன உயிர்…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி அதிர்ச்சியில் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நோய் குணமடையாததால் வீட்டிற்கு திரும்ப செல்லும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து சந்திரசேகரை அவருடைய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்சில் ஆக்சிஜன் உதவியுடன் சென்று கொண்டிருக்கும் போது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் ஓட்டுநர் உள்பட 3 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திரசேகர் உடலை மீட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கூறியதாவது, சந்திரசேகருக்கு மேலும் சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்ததால் அவரை சொந்த ஊருக்கு குடும்பத்தினர் அழைத்து சென்று கொண்டிருக்கும் போது லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி அதிர்ச்சியில் அவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |