Categories
உலக செய்திகள்

அமீரகத்தில் கொரோனா தொற்றிற்கு… ஒரே நாளில் 6 பேர் பலி …சுகாதாரத்துறை அறிவிப்பு …!!!

அமீரகத்தில் நேற்று ஒரே நாளில் ,கொரோனா தொற்றுக்கு 6 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அபுதாபியில் அமீரக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, அமீரகத்தில் சில மாதங்களாகவே கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது .அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 782 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகளில் 2,128 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்தது.

எனவே கொரோனா  தொற்றால்  பாதித்தவர்களின் எண்ணிக்கை, 4 லட்சத்து 50 ஆயிரத்து 765 தாக  அதிகரித்த உள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று 2,262 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது  4 லட்சத்து 34 ஆயிரத்து 35 பேர் குணமடைந்து  உள்ளனர் . நேற்று ஒரு நாள் மட்டும் ,கொரோனா  பாதித்தவர்களின் 6 பேர் உயிரிழந்தனர். எனவே தொற்றால் தற்போது  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,472 ஆகவும், சிகிச்சை பெறுபவர்களின் 15,258  உள்ளது.

Categories

Tech |